WHO IS READING THIS BLOG JESUS BLESS YOU

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 04



இந்த தொடரில் ஓரின சேர்க்கை பாவமும் அதில் உள்ள இரகசியம் என்ன? என்பதை விரிவாக எனக்கு தெரிந்த வகையில் ஆராய்கிறேன் . இந்த இரகிசியத்தை அறிந்துகொள்ள படைப்பின் தொடக்கத்தில் இருந்து தொடங்குவது சால சிறந்தது 

ஆதியாகமம்  2 அதிகாரம் 18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.


    21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

    22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

    23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
    24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

    இந்த வேத வசனத்தில் படைப்பின் தொடக்கத்தில் முதல் குடும்பத்தை தேவனே உருவாக்கினார். என்பதை அறிந்து கொள்ளலாம். ஆணில் இருந்து பெண் ? ஆதியில் தேவன் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான் என்பது படைப்பின் அடிப்படை கட்டளை.ஓரின சேர்க்கை பாவமாகிய ஆணுடன் ஆண்  பெண்ணுடன் பெண் திருமணம் செய்வது என்பது 
    1) படைப்பின் அடிப்படை கட்டளையை மீறுவது 
    2) தேவனுடைய படைப்பை கேலிசெய்வது 
    3) தேவனுடைய படைப்புக்கு சவால் விடுவது 
    சாத்தானின் குணத்தை ஆண்டவரகிய இயேசு இப்படி சொன்னார்  காணக (யோவான் 10: 10)

    திருடனாகிய சாத்தான் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி

     வேறொன்றுக்கும் வரான். நானோ ஆடுகளாகிய உங்களுக்கு ஜீவன்

     உண்டாயிருக்கவும், நீங்கள் பரிபூரணப்படவும் வந்தேன் என்றார் இயேசு 

    கிறிஸ்து. இந்த வேத வசனத்தில் இருந்து சாத்தான் எப்போதும் மனிதர்களை கொல்லவும் அழிபதுமே அவனது வேலை என்பது தெளிவாகிறது .
    ஓரின சேர்க்கை பாவத்தை செய்பவர்களது சின்னமான வானவில்லை வைத்ததின் மூலம்  சாத்தான் மிக தந்திரமாக தேவனை கொண்டே மனிதனை கொல்ல வைக்கவும் தேவனை ஒரு மகா கொடியவராக மனிதர்களுக்கு சித்தரிப்பதே அவனது நோக்கம் . காண்க 


    ஆதியாகமம் 9 



    பிறகு தேவன் நோவாவிடமும் அவனது பிள்ளைகளிடமும், “நான் உங்களோடும் உங்களுக்குப் பின்னுள்ள வாரிசுகளோடும், 10 உங்களோடு கப்பலிலே இருந்த பறவைகளோடும் மிருகங்களோடும் ஊர்வனவற்றோடும் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் எனது உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்கிறேன். 11 வெள்ளப்பெருக்கால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்பட்டன. ஆனால் மீண்டும் இது போல் நடைபெறாது. இன்னொரு வெள்ளப் பெருக்கு பூமியில் உள்ள உயிர்களை அழிக்காது” என்றார்.

    12 மேலும் தேவன், “உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு அடையாளமாக ஒன்றை உங்களுக்குத் தருகிறேன். உன்னோடும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரோடும் நான் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அது அத்தாட்சியாக இருக்கும். இந்த உடன்படிக்கை இனிவரும் எல்லாக் காலத்துக்கும் உரியதாக இருக்கும். இதுவே அந்த அத்தாட்சி. 13 மேகங்களுக்கு இடையே ஒரு வானவில்லை உருவாக்கி உள்ளேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி. 14 பூமிக்கு மேலாய் மேகங்களைக் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் அதில் வானவில்லைப் பார்க்கலாம். 15 வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் நான் எனக்கும் உங்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன். அந்த உடன்படிக்கை இனி ஒரு வெள்ளப் பெருக்கு உலகில் தோன்றி இங்குள்ள உயிர்களை அழிக்காது என்று கூறுகிறது. 16 மேகங்களுக்கிடையில் நான் வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பூமியின் மீதுள்ள அனைத்து உயிர்களுக்குமிடையிலான நிரந்தரமான உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன்.”

    17 “நான் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அத்தாட்சியாக வானவில் விளங்குகிறது” என்றார்.
    ஆகவே வானவில் என்பது இனி நீரினால் பூமியை அழிக்க மாட்டேன் என்று நோவாவிற்கு தேவனால் வழங்க பட்ட உடன்படிக்கையின் அத்தாட்சியாக இருக்கிறது தேவன் அறவே வெறுக்கும் ,தேவனுடைய படைப்பின் அடிப்படை கட்டளையை மீறும் பாவமாகிய   ஓரின சேர்க்கை  ஆணுடன் ஆண்  பெண்ணுடன் பெண் திருமணம் செய்வது போன்ற அருவருப்பிற்கு இனி நீரினால் பூமியை அழிக்க மாட்டேன் என்று நோவாவிற்கு தேவனால் வழங்கபட்ட உடன்படிக்கையின் அத்தாட்சியாக இருக்கிற வானவில்லை சின்ன மாக வைத்ததன் மூலம் சாத்தான் தனது நோக்கமாகிய மனிதர்களை கொல்லவும், மனிதர்களை அழிக்கவும்,நோவாவுடன் தேவன்  செய்த உடன்படிக்கையை தேவன் மீற  வேண்டிய இக்கட்டு நிலைக்கு தந்திராமாக மனிதர்களை கொண்டே  தேவனை சிக்க வைக்கும் மகா தந்திரம் 

    தற்போது இந்த பாவம் காட்டு தீ போல வேகமாக பரவி வருவதன் இரகசியம் என்ன ?
    நாம் வாழும் இந்த நாட்கள் பூமியின் இறுதி காலம் ,கலியுகம் வேதாகமம் முன்னுரைப்பதன்படி அனைத்து அருவருப்பபுகளுக்கும் அழிவிற்கும் தலைவனாகிய சாத்தான் மனித அவதாரம் எடுத்து 7 ஆண்டுகள் பூமியை ஆளுகை செய்யும் காலம் மிக சமீபமாக உள்ளது .அவன் வெளிப்படும் முன்னர் இந்த பாவத்தை உலகம் முழுவதும் பரப்பி  மனிதருக்கும் தேவனுக்கும் உள்ள உடன்படிக்கையை மனிதர்களை கொண்டே மீற வைத்து மனிதருக்கும் தேவனுக்கும் உறவை முதலில் உடைத்து பின்னர் தனது பரிபூரண கடுபாட்டிற்குள் மனிதர்களை உட்படுத்தி நான் மேலே உள்ள பந்தியில் சொன்னது போல  தேவனை கொண்டே மனிதனை கொல்ல வைக்கவும் தேவனை ஒரு மகா கொடியவராக மனிதர்களுக்கு சித்தரிப்பதே அவனது நோக்கம்

    காண்க  வெளி16 அதிகாரம்.9. அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை

    பின்னர் சாத்தானது நீண்ட நாள் ஆசையான தன்னை தேவனாக மனிதர்களை வணங்க வைப்பதே அவனது திட்டம் 
    காண்க  வெளி13 அதிகாரம்

        12. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.

        13. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,

        14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.

        15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.

        16. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,

        17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.

     தெசலோனிக்கேயர் 2


    4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 

    எனவே நாம் இறுதிகாலத்தில் வாழ்கின்றோம் என உறுதியாக அறிந்து கொள்ளலாம்.
    (உரோ.13:11)
    11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.

    12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.
    13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
    14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  

      வெளி14 அதிகாரம் 

        6. பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,

        7. மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.

        தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

        உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01



        உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 05


Share:

வல்லவனின் தேவன் என்னோடு என்றும் என்றும் என்னோடு song tamoul et français



வல்லவனின் தேவன் என்னோடு 
என்றும் என்றும் என்னோடு 
வல்ல செயல்கள் செய்கின்றார் 
உலகத்தின் ராஜா (2)
நன்மைகள் நன்மைகள் செய்கின்றார் 
ராஜாதி ராஜா இயேசு ராஜா விரைவில் விரைவில்வந்திடுவார்


Jésus est tout puissant 


Il fait des miracles 



Mon dieu est à moi 



Il est là 



Il est là 



Roi des Nations Roi du ciel 


Roi des Nations Roi du ciel

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Share:

நான் பாடும் தெய்வம் ஒரே மெய் தெய்வம்


நான் பாடும் தெய்வம் ஒரே மெய் தெய்வம் என்ற கருத்தில் வரும் பிரெஞ்சு எபிரேய மொழி பாடல்
Share:

நல்லவரோடு ஆண்டவர் என்றும் இருப்பார் ???

"நல்லவரோடு ஆண்டவர் என்றும் இருப்பார்" - 2குறி 19:11
Rev.Fr.R.John Joseph



கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இந்த “விடுதலை செய்தி” பகுதி வழியாக, உங்களை சந்திப்பதில், நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” - இ.ச 31:6,8, எனக் கூறிய நம் தந்தையாம் கடவுளின் பெயரால், உங்கள் அனைவரையும், வாழ்த்துகிறேன்.
பிரியமானவர்களே! வேதத்தில் யோசபாத் அரசனைப்பற்றி, கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர், இஸ்ராயேல் நாட்டின், தென்பகுதியாகிய யூதேயா நாட்டை, ஆண்டு வந்த அரசர். இவரைப் பற்றி, வேதம் இவ்வாறு கூறுகிறது.
“ஆண்டவர் யோசபாத்தோடு இருந்தார். ஏனெனில், அவர் பாகால்களை நம்பாமல், தம் மூதாதை தாவீது வழியில் நடந்தார். மேலும் அவர், இஸ்ராயேலின் செயல்களைப் பின்பற்றாமல், தம் மூதாதையரின் கடவுளையே நாடி, அவர் கட்டளைகளின் படியே, நடந்து வந்தார். ஆதலால், ஆண்டவர் அவரது ஆட்சியை நிலைநிறுத்தினார். ஆண்டவரின் வழியில், அவரது உள்ளம், உறுதியடைந்தது” - 2குறி 17:3-6.
யோசபாத் அரசன், தான் நீதிமானாக இருந்தது மட்டுமல்லாது, தன்னுடைய நாட்டு மக்களையும், இறை வழியில் வாழ ஊக்கப்படுத்தினார்.
“அவர், தமது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், யூதா நகர் எங்கும், போதிக்கும் பொருட்டு, தலைவர்களை..... அனுப்பி வைத்தார். அவர்கள், ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் சென்று, யூதாவில் போதித்தனர். யூதாவில் எல்லா நகர்களிலும், சுற்றி அலைந்து, மக்களுக்கு போதித்தனர்” - 2குறி 17:7-9.
மேலும் அவர், தன்னுடைய அவையில், அனேகரை வைத்திருந்தாலும், தெய்வ பயமுள்ள மக்களையும், உடன் வைத்துக்கொள்ள தவறவில்லை. அதில்,
“ஆண்டவருக்கு தன்னையே அர்ப்பணித்திருந்தவனும், சிக்ரியின் மகனுமான, அமசியாவும் ஒருவர் - 2குறி 17:16.
யோசபாத் அரசன், தான் நாட்டை ஆளும் ஒரு அரசராக இருந்தது மட்டுமல்ல, அவர் ஒரு போதகராகவும் இருந்தார்.
அவர் பலரை அனுப்பி, நாட்டு மக்களுக்கு போதித்தார் என்று கண்டோம். ஆனால் அதோடு, தாமே மக்களிடம் சென்று, மக்களுக்கு ஆண்டவரைப் பற்றி, நேரடியாகப் போதித்தார்.
“எருசலேமில் வாழ்ந்த யோசபாத்து, தம் குடிமக்களைக் காணப் புறப்பட்டு, பெயர்செபா முதல், மலைநாடான எப்ராயீம் வரை சென்று, மக்களை தம் மூதாதையரின் கடவுளான ஆண்டவரிடம் திருப்பினார்” - 2குறி 19:4.
அது மட்டுமல்லாது, தன் மக்களுக்கு நீதி வழங்கவும், பணிவிடை செய்யவும், நீதிபதிகளையும், லேவியரையும் நியமித்தார். அவர்களும், தெய்வ பயமுள்ளவர்களாய், கடவுளுடைய இடத்திலிருந்து, பணியாற்ற வேண்டுமென்று உபதேசித்தார்.
“நீங்கள் நீதி வழங்குவது, மனிதனை முன்னிட்டு அன்று; ஆண்டவரை முன்னிட்டே. ஏனெனில், நீதி வழங்குவதில் அவர் உங்களோடு இருக்கிறார். உங்களிடையே, இறையச்சம் இருக்கட்டும். எல்லாவற்றையும், கவனத்தோடு செய்யுங்கள். நம் கடவுளாகிய ஆண்டவரிடம், அநீதி இல்லை; ஓர வஞ்சனை இல்லை; கையூட்டும் அவரிடம் செல்லாது; நீங்கள், ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும், நேரிய உள்ளத்தோடும், நடங்கள்” - 2குறி 19:6,7,9.
யோசபாத் அரசன், தெற்கே யூதேயாவை ஆண்ட அதே காலகட்டத்தில், ஆகாபு என்ற மன்னன், வடக்கே இஸ்ராயேலை ஆண்டு வந்தான். இந்த ஆகாபு மன்னன், யோசபாத் அரசனுக்கு நேர்மாறானவன். அவன், தான் பாவியாக இருந்ததோடு மட்டுமல்லாது, தன் நாட்டு மக்களையும், பாவம் செய்யத் தூண்டினான்.
“ஓம்ரியின் மகன் ஆகாபு, ஆண்டவரின் பார்வையில், தீயதெனப்பட்டதை, தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட, மிகுதியாய் செய்தான். தீய வழிகளில் அவன் நடந்தது போதாதென்று, சீதோனிய மன்னனின் மகள், ஈசபேலை மணந்துகொண்டு, பாகால் தெய்வத்தை வணங்கி, வழிபடலானான்” - 1அர 16:30-31.
ஆகாபின் மனைவி ஈசபேல், எவ்வளவு தீயவள் என்றால், அவள் இஸ்ராயேலின் இறைவாக்கினர்களைக் கொன்று குவித்தாள் - 1அர 18:4,13. அவள், தன் கணவனைத் திருப்திப்படுத்த, நாபோத்தைக் கொலை செய்தாள் - 1அர 21:15. அது மட்டுமல்லாது, எலியா இறைவாக்கினரைக் கொல்லவும், திட்டமிட்டாள் - 1அர 19:2,3.
இந்த சூழ்நிலையில், எவ்வளவோ நல்லவரான யோசபாத் அரசன், ஒரு தவறு செய்தார். தீயவனான இந்த ஆகாபின் குடும்பத்தோடு, அவர் நட்புறவு கொண்டார்.
“திருமணத்தின் வழியாக, ஆகாபுடன் உறவுமுறை கொண்டார்” - 2குறி 18:1.
ஆம் பிரியமானவர்களே! யோசபாத் அரசர், எவ்வளவோ கடவுளுக்குப் பிரியமானவராயிருந்தும், “கூடா நட்பால்” பெரும் ஆபத்துக்குள்ளால் மாட்டிக் கொண்டார். தீயவனான ஆகாபு மன்னனை சந்திக்க, அவர் சமாரியா சென்றார். அங்கே, விருந்து நடந்த போது, ஆகாபு மன்னன் சூழ்ச்சியாக, யோசபாத்தை நோக்கி, “சீரியா அரசனுக்கு எதிராகப் போர்தொடுக்க, என்னோடு வருவீரா” என்று கேட்டான் - 2குறி 18:3. அதற்கு யோசபாத்தும் உடன்பட்டார்.
“உம்மைப்போலவே, நானும் தயார்; உம் மக்களைப் போலவே, என் மக்களும்; நான் உமக்கு துணையாக, போருக்கு வருவேன்” - 2குறி 18:3.
அப்படியே, ஆகாபுடன் போருக்குப் போக உடன்பட்டாலும், நல்லவரான யோசபாத், ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்கத் தவறவில்லை. அவர், ஆகாபு மன்னனை நோக்கி, இதைக் கேட்டார்.
“ஆண்டவரின் வாக்கு எதுவென, இன்று நீர் கேட்டறிய வேண்டுகிறேன்” - 2குறி 18:4.
ஆனால், ஆகாபு மன்னன், பொய்வாக்கினரை வரவழைத்து, பேசச் சொன்னான். அவர்களும், எல்லாரும் ஒரே குரலாய், போருக்குப் போக கூறினார்கள். இதுவே கடவுளின் விருப்பம் என்று, பொய் பகர்ந்தார்கள் - 2குறி 18:5. ஆனாலும், நல்லவரான யோசபாத் அரசருக்கு, அது திருப்தியாகப் படவில்லை. எனவே அவர், ஆகாபிடம் மீண்டும் கேட்டார்,
“நாம் கேட்டறிய, இங்கே ஆண்டவரின் இறைவாக்கினர்கள் யாருமில்லையா?” - 2குறி 18:6.
அப்போது, இறைவாக்கினர் மீக்காயாவை ஆளனுப்பி அழைத்துவர, ஆகாபு மன்னன் கூறினான். மீக்காயா, உண்மை இறைவாக்கினர் ஆதலால், ஆகாபு மன்னன், போரில் தோல்வி கண்டு மடிவான் என்றார் - 2குறி 18:16,27.
இதைக் கேட்டபிறகும், ஆகாபோடு சேர்ந்து, போருக்குச் செல்ல, யோசபாத் இசைந்தார். போர் மும்முரமாக நடந்தது. ஆகாபு மன்னன், எவ்வளவு வஞ்சகம் மிக்கவன் என்றால், யோசபாத்தை அரச ஆடை அணிந்து, போர்க்களம் போகச் சொன்னான். தானோ, மாறுவேடம் பூண்டு வருவதாகக் கூறினான்.
போர்க்களத்தில், ஆகாபு யார் என்று அறிந்திராத சீரியப்படையினர், யோசபாத்தை ஆகாபு என எண்ணி, அவரை முற்றுகையிட்டனர். அப்போது தான், யோசபாத் அரசன், மெய்யுணர்வு பெற்றார். தாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டோம் என்று அறிந்த யோசபாத், மனிதனின் உதவியை நாடாமல், கடவுளை கூவி, உதவிக்கு அழைத்தார்.
“அப்பொழுது யோசபாத், ஆண்டவரை நோக்கி கூக்குரலிட, ஆண்டவரும், அவருக்கு துணையாக வந்து, எதிரிகள் அவரை விட்டு விலகும்படி செய்தார்” - 2குறி 18:31.
இவ்வாறு யோசபாத், போர்க்களத்தில் உயிர் தப்பினார். ஆனால், கடவுள் தீயவனான ஆகாபை விட்டு வைக்கவில்லை.
“ஒரு மனிதன், தனது வில்லை நாணேற்றி, குறிவைக்காமல் அம்பெய்தான். அது, இஸ்ராயேல் அரசன், ஆகாபின் கவசத்தின் இடை வழியே பாய்ந்தது” - 2குறி 18:33.
ஆகாபு மன்னன், போர்க்களத்தில் மடிந்தான். நடந்த இந்த நிகழ்ச்சிகள், யோசபாத் அரசரை, மிகவும் சிந்திக்க வைத்தது. அவரை, இந்த பெரிய ஆபத்தினின்று காப்பாற்றியது என்ன என்று, எண்ணிப் பார்த்தார்.
அவர், நீதிமானாயிருந்து, தெய்வபயத்தோடு, கடவுளுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழ்ந்ததே, அவரை அந்த மாபெரும் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றியது. தன் பெலவீனத்தால், தீய நட்பைக் கொண்டதும், அந்த நட்பால், ஆண்டவரின் வாக்கைக் கேளாமல் போனதும், தவறு என்றாலும், கடவுள் யோசபாத்தைக் கைவிடவில்லை. இதை நன்கு புரிந்துகொண்ட யோசபாத் அரசர், தன் மக்களுக்கும், நீதிபதிகளுக்கும், குருக்களுக்கும், உபதேசம் கொடுக்கையில், கீழ்க்காணும் சத்தியத்தை எடுத்துச் சொன்னார்.
“என் மக்களே! மன உறுதியுடன் செயல்படுங்கள்; நல்லவரோடு ஆண்டவர் என்றும் இருப்பார்” - 2குறி 19:11.
யோசபாத்து அரசருக்கு, ஆண்டவர் வெளிப்படுத்திய இந்த பெரிய சத்தியத்தின் படியே, நமது வாழ்க்கை அமையட்டும். எந்த சூழ்நிலையிலும், கடவுள் விரும்புவதையே செய்து, கடவுள் விரும்பாததை தவிர்க்கும் ஒருவருக்கு, கடவுள் எல்லா வகையிலும், துணை நிற்பார்.
அவனுடைய பெலவீனத்தில், தேவ கிருபை பெலனைத் தரும் - 2கொரி 12:9-10. சோதனைகள் வந்தாலும், திராணிக்கு மேல் சோதிக்காத தேவன், தாங்கும் பெலனும் அளித்து, தப்பும் வழியையும் காட்டுவார் - 1கொரி 10:13. இதை உணர்ந்தே, தாவீது, “நல்லவருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்தே வருகிறது” என்றார் - தி.பா 37:39. ஆமென். 
Share:

கனத்திற்கும் மதிப்பிற்குமுரிய ஈஸா நபி




Share:

புண்ணிய நதி மிகவும் பயங்கரமான ஆபத்து!!!



Share:

Popular Posts

Blog Archive

Blog Archive